• May 18 2024

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த முறை எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தில்  விஜய் உட்பட த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், அர்ஜுன், கௌதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

காஷ்மீர் படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. லியோ படத்தை பற்றி பல அறிவிப்புகள் வந்துவிட்டதால் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டே வெளியாகும் என தெரிகின்றது. ஆனால் அவ்வப்போது இணையத்தில் சில பல தகவல்கள் கசிந்த வண்ணமே உள்ளன.


அதே போல தான் சமீபத்தில் மலையாள நடிகர் லியோ ஜார்ஜ் லியோ படத்தில் விஜய்யின் அண்ணனாக நடிக்கின்றார் என ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதைப்பற்றி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது லியோ படத்தை பற்றி மேலும் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 


அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் மதுரை அல்லது கோவை போன்ற நகரங்களில் நடத்தவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.பொதுவாக விஜய்யின் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் தான் நடைபெற்று வருகின்றது. எனவே இம்முறை மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.


இதனை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார். எனவே விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement