• May 18 2024

250 போலீஸார் பாதுகாப்புடன் 'ஆதிபுருஷ்' டீசரை வெளியிட்ட படக்குழுவினர்... அதுவும் எந்த இடத்தில் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜக்ட் கே' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


அதுமட்டுமல்லாது இதனிடையே ஓம் ராவத் இயக்கியுள்ள 'ஆதிபுருஷ்' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். 'ஆதிபுருஷ்' 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஆதிபுருஷ் படத்தில் இருந்து பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்திருந்தது.

அத்தோடு 3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் ராமாயணத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார். 


இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசரை படக்குழுவினர் அயோத்தியில் இருந்து வெளியிட்டுள்ளனர். இதற்காக பிரபாஸ், கிருத்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஏற்கனவே அயோத்தி சென்றிருந்தனர்.

அந்தவகையில் அயோத்தியில் உள்ள சரயு நதியோரம் சுமார் 10 ஆயிரம் பேர் முன்னிலையில் ஆதிபுருஷ் டீசர் வெளியியிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கே 250 போலீஸார்களும், 200 பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 50 அடியில் ஆதிபுருஷ் படத்தின் போஸ்டரையும் பேனராக வைத்துள்ளதுனர் படக்குழுவினர்.


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளிலும் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசரானது வெளியாகி பிரபாஸ் ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நிமிடம் 46 நொடிகளினை கொண்ட இந்த டீசரானது ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'சாஹோ, ராதே ஷ்யாம்' ஆகிய படங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் ஆதிபுருஷ் திரைப்படமானது அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement