சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலா சினிமாஸ் உரிமையாளரின் மகன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏற்கனவே டிக்கெட் புக்கிங் தொடங்கி ரசிகர்கள் மாஸ் காட்டி வரும் நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 5 முதல் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கும் என தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என பாசிட்டிவ் அப்டேட்கள் கசிந்த நிலையில், அமெரிக்காவில் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல திரையரங்குகள் ரெட் கலரில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறி விட்டன.
ரசிகர்கள் டிக்கெட்டுகளை மாலையாக அணிந்து கொள்வது என்றும் சில கம்பெனிகள் ஆகஸ்ட் 10ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்தும் இன்னமும் ரஜினிகாந்த் மாஸ் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை நிரூபித்து வருகின்றன.
அடுத்த வாரம் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு ஓவர்சீஸில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக அனைத்து தியேட்டர்களிலும் இன்று ஆரம்பம் ஆகுமா? அல்லது குறிப்பிட்ட சில திரையரங்குகளில் முதலில் டிக்கெட் புக்கிங் தொடங்குமா என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
நடிகர் ரஜினிகாந்த் உடன் கமலா தியேட்டர் உரிமையாளரின் மகன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கும் என்றும் அதன் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு அதிகபட்சம் டிக்கெட் புக்கிங் சென்னையில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் தொடங்கினால், எத்தனை நிமிடங்களில் விற்றுத் தீரப் போகிறது என்பதை அறிய ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
Listen News!