• May 12 2024

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா...வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றியைப் பெற்றது.

நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட்,ஹாலிவுட்  என பல படங்களில் கெமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தான் அட்ராங்கி ரே, தி கிரே மேன்.இப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மாத்திரமல்லாது வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் குட்டி ,உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் தனுஷ் நான்காவது முறையாக கைகோர்த்து உருவாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். 

அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது இத் திரைப்படம் .

இந்த படம் உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement