• Sep 25 2023

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்கிறார் தெரியுமா? சீக்ரெட் டிப்ஸ் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் சினிமாவில் பாடகர்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நித்யஸ்ரீ வெங்கட்ராமனன்.


நித்யஸ்ரீ. தமிழை தாண்டி ஹிந்தியிலும் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.டாப் 5 இடத்தினை பிடித்து ஒரு லட்சம் ரூபாய் பரிசை பெற்றதோடு பல இசையமைப்பாளர்களின் இசையில் பாட வாய்ப்பு பெற்றார்.

தற்போது நிறைய இசைக் கச்சேரிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.இந்நிலையில் அவர் தனது முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.ஹெர்பல் விஷயங்களை மட்டும் தான் முதலில் பயன்படுத்துவாராம்.


அதில் முதலாவது வேப்பிலை, அதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து நன்கு ஆற வைத்து பின்பு அந்த நீரால் தினமும் காலையில் முகத்தை வாஷ் செய்வாராம்.

புதினாவை நன்கு அரைத்து அந்த சாறுடன் கிளீசரின் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்வாராம். ஐஸ்கட்டிகளை எடுத்து முகத்தில் அப்படியே தடவி மசாஜ் செய்வாராம், இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி வெள்ளையாக்குமாம்.



உருளைக்கிழங்கை நன்கு மைய அரைத்து அதை அப்படியே முகம், கழுத்து முழுவதும் தடவுவாராம்.இவ்வாறு தான் அவரின் முகம் பளபளப்பாக அழகில் ஜொலிக்க காரணமாம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement