• Mar 27 2023

நடிகர் ஐஸ்வர்யா ராயின் தாய் மொழி என்ன தெரியுமா?- இவருக்கு இத்தனை மொழி தெரியுமா?

stella / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா ராய் . இதனைத் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி தமிழ் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

மேலும் இவர் பிரபல பாலிவூட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்து கொண்ட அவர் குறைந்த அளவிலான படங்களில் தான் நடிக்கிறார்.


கடந்த வருடம் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக அவர் மீண்டும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.ஐஸ்வர்யா ராய் மும்பையில் வசித்தாலும் அவரது தாய்மொழி துளு தான். அவர் தனக்கு மொத்தம் 5 மொழிகள் தெரியும் என இளம் வயதில் கொடுத்த பேட்டியிலேயே கூறி இருக்கிறார்.


ஹிந்தி, மராத்தி, துளு (தாய்மொழி), தமிழ், ஆங்கிலம் என மொத்தம் அவருக்கு 5 மொழிகள் தெரியுமாம்.மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement