• Mar 27 2023

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் சூர்யா நடிக்க இது தான் காரணம்- ஓபனாக பேசிய லோகேஷ்

stella / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், பகத் பாசில், காயத்ரி, மைனா நந்தினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது விக்ரம்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவை வித்தியாசமாக கையாண்டிருந்தார் லோகேஷ். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சூர்யாவின் கேரக்டரை மிகவும் சஸ்பென்சாகவே வைத்திருந்தார். படத்தில் 3 நிமிடங்களே வந்தாலும் தன்னுடைய ரோலக்ஸ் கேரக்டரில் மிரட்டியிருந்தார் சூர்யா. சூர்யாவை அந்த கேரக்டரில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்


அவர் முன்னதாக இயக்கிய மாநகரம், கைதி,மாஸ்டர் படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்த போதிலும் விக்ரம் படமே அவருக்கு மிகச்சிறந்த வெற்றியைக் கொடுத்தது. சர்வதேச அளவில் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் இந்தப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்தப் படத்தின் இந்த வெற்றி அவரது அடுத்தப்படமான தளபதி 67 படத்திற்கும் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில் தன்னுடைய 50 சதவிகிதத்தையே அந்தப் படத்தில் கொடுத்திருந்ததாகவும் தளபதி 67 படத்தில் 100 சதவிகிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்றைய தினம் கோவையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.ரோலக்ஸ் கேரக்டருக்கு சூர்யாவை தேர்தெடுக்க அவரது தீவிரமான நடிப்பே காரணம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement