• May 17 2024

உடல் எடையைக் குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'மெய்னி தில் துஜ்கோ தியா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதுமட்டுமல்லாது இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்' என்ற படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.


இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். அதன் பின்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கின்ற சமீராவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். 


இந்நிலையில் இவர் உடல் எடை குறைப்பிற்கான டிப்ஸ் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது இவர் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பாராம். அத்தோடு இரவு டின்னர் 7 மணிக்குள் முடித்து விடுவாராம், பின்பு மறுநாள் மதியம் வரை உணவு எடுத்து கொள்ளாமல் பழங்கள், ஜுஸ், தண்ணீர் மட்டும் தான் குடிப்பார் எனக் கூறியுள்ளார்.


அத்தோடு பின்னர் மதியம் காய்கறி நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவாராம். இதனையடுத்து சரியாக 1 மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்கி விடுவாராம். அதுமட்டுமல்லாது சமீரா ரெட்டி யோகா, வொர்க்கவுட்ஸ் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் சமீரா காலை நேரத்தில் தான் செய்த வாக்கிங் தன்னுடைய உடல் சதையை குறைக்க பெரிதும் உதவியதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement