• May 17 2024

சினேகாவின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா…வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் தங்களுடைய 10 திருமண நாள் குறித்து பிரசன்னா உருக்கமான பதிவு ஒன்றை கூட வெளியிட்டிருந்தார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா, சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நடிகை சினேகாவின் நடிகை சினேகா ஒரு படத்திற்கு சுமார் ரூ. 25 லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அத்தோடு , நடிகை சினேகா ரூ. 40 கோடி சொத்து சொந்தக்காரி என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால் பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.

Advertisement

Advertisement