• May 18 2024

மாபெரும் வெற்றியடைந்த 'மாவீரன்'... தயாரிப்பாளருக்கு எத்தனை கோடி லாபம் தெரியுமா...!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் மாவீரன்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 


மேலும் சிவகார்த்திகேயன், அதிதி சங்கருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமானது வெளியான நாளிலிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக்குவித்து வருகின்றது.

அந்தவகையில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த இப்படம் ஆனது தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாயை லாபமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது ரூ. 35 கோடி பட்ஜட்டில் மட்டுமே தயாரான இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததோடு, ரூ. 40 கோடி ஷேரினையும் பெற்றுக் கொடுத்துள்ளது.


அதுமட்டுமல்லாது 'மாவீரன்' படம் ரிலீஸாவதற்கு முன் பிஸ்னஸ் செய்யப்பட்டமையை அடுத்து இதன் வாயிலாக ரூ. 83 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. ஆகவே மொத்தமாக வைத்துப் பார்க்கும் போது 'மாவீரன்' படத்தின் மூலமாக தயாரிப்பாளருக்கு ரூ. 85 கோடிக்கும் லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement