• Oct 09 2024

இயக்குநர் சேரனின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தமிழ்த் திரையுலகினர் பலரும் அஞ்சலி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம்வரும் சேரனின் தந்தை பாண்டியன் இன்றைய தினம் உடல்நலக்குறைவு காரணமாக தனது 84வது வயதில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல நல்ல படங்களை ரசிகர்களை வழங்கி சந்தோஷப்படுத்தியவர் தான் இயக்குநர் சேரன். 

இந்த நிலையில், சினிமா ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த சேரனின் தந்தை எஸ். பாண்டியன் கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார்.


மேலும், மதுரையில் உள்ள பழையூர்பட்டியில் வாழ்ந்து வந்த சேரனின் தந்தை அவரின் சொந்த ஊரிலேயே உயிரிழந்ததால், அவரின் இறுதிச் சடங்குகள் அங்கேயே நடைபெறவுள்ளது. 

சேரன் இயக்கி நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் அப்பாவின் பாசம் அம்மாவின் பாசத்தை விட பெரிதாக இருக்கும் என்பதை தத்துரூபமாக  காட்டியிருந்தார். தற்போது, சேரனின் அப்பாவின் மரணம் அவரை நிலை குலைய செய்துள்ளது. 

இதேவேளை, தற்போது சேரனின் தந்தை பாண்டியனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement