• May 18 2024

சமந்தா மற்றும் நடிகர் சித்தார்த்தின் திருமணத்திற்கான பூஜை நடந்ததா?-இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.அந்த வகையில் தெலுங்கில் இறுதியாக புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா மாமா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.


அதே போல தமிழில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்திருந்த கஜுதா கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஷோலோ ஹீரோயினாக யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் விஜய்தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்திலும் நடித்து வருகின்றார். இப்படங்கள் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்பு 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

 சமந்தா நாக சைதன்யாவிற்கு முன் நடிகர் சித்தார்தை தான் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பொது இடங்களில் இவர்கள் குறித்த புகைப்படங்கள் அப்போது செம வைரலானது.


அதன்படி அப்போது பெரிய கிசுகிசுக்கப்பட்ட விஷயம் அவர்கள் இருவரின் திருமணம். இருவரும் கலந்து கொண்ட பூஜை ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி அது திருமணத்திற்கான பூஜை என்றும் அப்போது பேசப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எதோ திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement