• Sep 30 2023

என்னுடைய கணவர் தாக்கி விட்டாரா?- நடிகை சமீரா ஷரீஃப் சொன்ன அதிர்ச்சித் தகவல்- கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகையாக வலம் வந்தவர் தான்  சமீரா ஷரீஃப். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்னும் சீரியல் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துக் கொண்டார் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.

இவர் அன்வர் என்னும் சீரியல் நடிகரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.இந்நிலையில் முகத்தில் காயம் இருக்கும் ஒரு போட்டோவை சமீரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியாகி, என்ன ஆனது என்று கேட்டு வந்தனர்.


இந்த போட்டோவை பார்த்து என்னுடைய கணவர் தான் என்னை தாக்கிவிட்டார் என எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நிஜம் என்ன என்பதை தெரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள். இந்த காயத்திற்கு காரணம் என்னுடைய மகன் அர்ஹான் தான் என கூறி இருக்கிறார்.


மேலும் திருமணம் ஆன புதிதில் உறவினர் குழந்தையுடன் விளையாடும் போது சில காயங்கள் ஏற்படும் அதை பார்த்து கூட பலரும் என்னுடைய கணவர் தான் தாக்கி விட்டார் என நினைத்து கேட்பார்கள்.எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்யாதீர்கள் என சமீரா ஷெரிப் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடதத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement