• May 19 2024

“கார்த்தியை நம்பிதான் இதைச் செய்தேன் ஆனா?” ஜெயம்ரவி ஓப்பன் டாக்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.இவர் வித்தியாசமான கதைகளை உலகிற்கு கொடுப்பதில் கை தேர்ந்தவர்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தற்போது வெளியான 'பொன்னி நதி' என்ற முதல் பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது/ "காவிரியாள் நீர் மடிக்கு, நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும், உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும், சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்" என சோழ தேசத்தின் பெருமையையும் பொன்னிநதி பெருமையையும் வந்தியத்தேவன் பாடும்படி வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருக்கும் இப்பாடலை எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

'பொன்னியின் செல்வன்' வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது. மேலும் டீசர், முதல் பாடலைத் தொடர்ந்து, ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் 'பொன்னியின் செல்வன்' ஜுரம் இப்போதே உச்சம் தொட்டுவிட்டது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் சோழ இளவரசன் அருள்மொழிவர்மன் என்ற பாத்திரத்தில், ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்நிலையில், 'பொன்னி நதி' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, "பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது, எனக்கு மறக்க முடியாத அனுபவம்,மேலும் அதுமட்டும் இல்லாமல் இது எனக்கு பெருமை" எனத் தெரிவித்தார். "ஜெயராம் தனக்கு குருசாமி எனவும், அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி" என்றும் கூறினார்.

'பொன்னி நதி' பாடலை ரசிகர்கள் ரொம்பவே என்ஜாய் செய்து ரசித்தனர். எனினும் அதனைக் குறிப்பிட்ட ஜெயம் ரவி, "பாடலின் ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்து ஆர்ப்பரித்த ரசிகர்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளதாகவும், சரியான உழைப்பிற்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் அங்கீகாரம் கொடுப்பார்கள்" என்றும் அவர்களை பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடித்துள்ளேன், இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" எனக் குறிப்பிட்டார். மேலும், "பொன்னியின் செல்வன் படத்தில் குதிரைக் காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும், இதில் என்னவிட கார்த்தி தான் மாஸ்டர்" என்றும் கூறினார்.

அதுமட்டும் இல்லாமல், "குதிரையில் ஏற தயங்கிய என்னை, கார்த்தி தான் அழைத்துச் சென்று ட்ரெய்னிங் கொடுத்ததாகவும், ஆனால், அவரே ஒருமுறை குதிரையில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும்" சிரித்துக் கொண்டேக் கூறினார். "கார்த்தியே விழுந்துவிட்டப் பிறகு, நாமும் விழுந்தால் தவறில்லை என்றே மீண்டும் குதிரையில் ஏறினேன்" என ஜெயம் ரவி கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement