• May 08 2024

மருத்துவமனைக்கே சென்று பாரதிராஜாவை சந்தித்து பேசிய தனுஷ்- மருத்துவ நிர்வாகம் கொடுத்த சலுகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த  இயக்குநராக இருப்பவர் தான் பாரதி ராஜா. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இவர் அண்மையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில்  சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவமனை அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


 அந்த அறிக்கையில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாரதிராஜாவுக்கு தற்போது சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தற்போது அவரைப் பார்க்க வெளியாட்களை மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்து வருவதால் நடிகர் தனுஷ் இப்போது மருத்துவமனைக்கே சென்று பாரதிராஜாவை சந்தித்து பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.. 

Advertisement

Advertisement

Advertisement