• May 12 2024

கிளாமர் தூக்கலா போஸ் கொடுத்து தர்ஷா குப்தா-வர வர இப்படியா...ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 சட்டை பட்டனை கழட்டிவிட்டு  படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். 



சீரியலில் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணி அணிந்து வந்தாலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அதகளம் செய்திடுவார் தர்ஷா.



இதன்பலனாக இவருக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்த படம் ருத்ரதாண்டவம். திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா. முதல் படத்திலேயே திறம்பட நடித்து பாராட்டுக்களையும் பெற்றார் தர்ஷா.



இதையடுத்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர யோகிபாபுவுடன் இணைந்து மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார் தர்ஷா. மேலும் சில பட வாய்ப்புகளும் அவருக்கு குவிகின்றன.



இவ்வாறு படங்களில் பிசியான போதும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் தர்ஷா. அதன்படி தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement