• Apr 28 2024

டேனியல் பாலாஜி கட்டும் கோயில்.. கேட்காமலேயே நிதி அளித்த KGF யாஷ்.. அதுவும் யார் பெயரில் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் டானியல் பாலாஜி. பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து வந்த டேனியல் பாலாஜி அண்மையில் தன்னுடைய தாயின் ஆசைக்காக கோயில் ஒன்றை கட்டியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழியில் நடித்துவரும் டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. வடசென்னை திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி அண்மையில் சில வாரங்களுக்கு முன்பு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான அரியவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் சென்னை ஆவடிக்கு அருகில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி இதுகுறித்த விபரங்களை தற்போது மிக பேட்டி ஒன்றில்  பிரத்தியேக பேட்டியில் அளித்திருக்கிறார்.

இந்த பேட்டியில் பிரபல கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடிக்கும் ஒரு படத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அந்த சமயம், தான் கோயில் கட்டும் பணியில் இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்ததை அடுத்து, அப்போதும் டேனியல் பாலாஜியை கேஜிஎஃப் யாஷ் நடிப்பதற்காக புக் செய்து விட்டதாகவும் குறிப்பிட்டவர், பிறகு மேனேஜர் ஃபோன் செய்வார் என்று சொல்லி இருக்கிறாராம். அதன் பிறகு மேனேஜர் ஃபோன் செய்தபோது டானியல் பாலாஜிக்கு பணத்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நடிப்பதற்கு முன்பு எதற்காக இவ்வளவு பெரிய சம்பளம் என்று டேனியல் பாலாஜி கேட்ட போது, இது அதற்கு இல்லை. இது கோயில் கட்டுவதற்கான பணம் என்று கே ஜி எஃப் யாஷ் கூறியிருக்கிறாராம்.

அப்போது நெகிழ்ந்து போய் டேனியல் பாலாஜி, “இதற்கு யார் பெயரை போட வேண்டும் ?” என்று கேட்டதற்கு தனக்கு குழந்தை பிறந்ததும், அந்த குழந்தை பெயரில் இந்த தொகையை புரவலராக பதிவு செய்துவிடுங்கள்” என்று கூறி இருக்கிறாராம். இதுகுறித்து டேனியல் பாலாஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement