• Jan 18 2025

நொறுங்கிப்போன நாற்காலிகள்! மிக மோசமான நிலையில் தவெக மாநாட்டு திடல்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு நேற்று விக்கிரவாண்டி பகுதியில் மிக மிக பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் ஆறு லட்சம் பேர் பங்கெடுப்பார்கள் என யூகிக்கப்பட்டது. இதற்காக சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டு அதில் சேர்கள் போடப்பட்டு மாநாட்டிற்கு வருபவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காக மொத்தமாக ஐந்து நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. 


லட்சக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் என அந்த இடமே நிரம்பி இருந்தது. தளபதி tvk கொடி ஏற்றால், 2 மணித்தியாலய பேச்சி என  பல சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அளவில்லாத மக்கள் கூட்டத்தினால் சிலர் மயக்கி விழுந்தனர். மக்கள் நெரிசலினால் பலர் சிரமத்துக்கு உள்ளாகினர். இருபின்னும் தளபதியை கண்டதும் மக்கள் அவ்வளவு ஆரவாரம் செய்து மிக அருமையாகவே மாநாடு நிறைவு பெற்றது. 


இந்நிலையில் விசாலை விக்கிரவாண்டி பகுதியில் tvk மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த திடல் முழுவதும் பல்வேறு சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. தொண்டர்கள் அமர்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏராளமான கதிரைகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. எவ்வளவு செலவு செய்து இதனை ஏற்பாடு செய்தார்களோ அதைவிட பலமடங்கு செலவு வந்துவிட்டது. மாநாட்டு திடலில் குவியல் குவியலாய் உடைந்த கதிரைகள் வைக்கப்பட்டுள்ளது.   




Advertisement

Advertisement