• Jan 19 2025

எழில் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. கேட்க கூடாததை கேட்ட பாக்கியா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்த பழனிச்சாமி காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு கால் ஒன்று வந்து வருகின்றது. அதன் பின்பு தான் பிசினஸ் விஷயமாக துபாய்க்கு செல்ல இருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மாதமாகும் எனவும் தெரிவிக்கின்றார். இதனால் பாக்கியா அவருக்கு வாழ்த்து சொல்லி அனுப்புகின்றார்.

இன்னொரு பக்கம் எழில் ப்ரொடியூசரை சந்திப்பதற்காக தனது நண்பருடன் காத்திருக்கின்றார். அதன் பின்பு அவரை சந்தித்து தனது கதையை சொல்ல, அவரும் ஒரு வழியாக ஓகே பண்ணி விடுகிறார். ஆனால் எழிலுக்கு மிகபெரிய இன்ப அதிர்ச்சியாக காணப்படுகிறது.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த எழில் அமிர்தாவை தூக்கி சந்தோஷத்தில் சுத்தியதோடு விஷயத்தை சொல்லுகின்றார். மேலும் இனியாரும் கஷ்டப்பட தேவையில்லை. எல்லாம் சரியாகிட்டு என சொல்ல, அமிர்த அவருக்கு முத்தமழை  பொழிகின்றார்.

இந்த நல்ல விஷயத்தை பாக்கியாவிடம் சொல்வதற்காக இருவரும் வருகின்றார்கள். அங்கு ரெஸ்டாரண்டில் பாக்கியா உணவு பரிமாறுவதை பார்த்து எழில் வேலையாட்கள் எங்கே என கேட்க, செல்வி உண்மையை சொல்லிவிடுகிறார். அதன் பின்பு எழில் தனக்கு ப்ரொடியூசர் ஓகே பண்ணிய விஷயத்தை சொல்ல பாக்யா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார்.


இறுதியாக அமிர்தா பாக்யாவிடம் தான் ரெஸ்டாரண்டுக்கு வரட்டுமா? என்னை வர வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று சொல்ல, பாக்கியாவும் சரி என சொல்கின்றார். அதன் பின்பு எழில் உனக்கு வந்து போறது கஷ்டம் இல்லையா என்று கேட்க, அம்மாவை இப்படி ஒரு நிலைமையில் விட்டு விட்டு இருக்கத்தான் கஷ்டமாக இருக்கும். அத்துடன் நானும் நிலாவும் இங்கு வந்தால்  நன்றாக சாப்பிடுவோம் என்று சொல்ல, எழில் கவலையில் அழுகின்றார்.

இதை எல்லாம் மறுபக்கம் பாக்கியா கேட்டுக்கொண்டு கண் கலங்குகின்றார். மேலும் எழில் நீயும் அம்மாவும் என் வாழ்க்கையில் கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று சொல்கின்றார்.

Advertisement

Advertisement