• Jan 18 2025

இவர் இல்லனா நாங்க குக் வித் கோமாளி பார்க்க மாட்டோம் போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெருமளவான ரசிகர்களை கொண்டது "குக் வித் கோமாளி" ஆகும். ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பின் காரணமா 4 சீசன்களை கடந்த நிலையில் இதன் அடுத்த சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளத்துடன் அது தொடர்பான இரண்டு புரோமோக்களையும் வெளியிட்டிருந்தனர்.

இதில் நடுவராக இருந்த வெங்கடெஷ் பட் வேறு ஒரு நிகழ்ச்சியில் கமிட் ஆகியதால் சீசன் 5 இல் இருந்து விலகியதுடன் , செஃப் தாமுவுடன் இணைந்து நடுவராக சமையல் நிபுணரும் ,நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் இணைந்துள்ளார். 

இதில் வழமையாக சீசன் 1 இல் இருந்து வந்த மணிமேகலை ,ரக்சன் , புகழ் போன்றவர்களும் காணப்படுவதுடன். இவர்களுடன் விஜய் டிவி காமெடியன் ராமரும் புதிய கோமாளியாக இணைந்துள்ளார். மற்றும் சிவாங்கி இந்த சீசனில் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகின்ற நிலையிலேயே பிரபல காமெடியன் kpy பாலா இல்லையென்றால் நாங்கள் பார்க்க மாட்டோம் என "குக் வித் கோமாளி" ரசிகர்கள் குறி வருகின்றனர்.

ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து இன்றளவிலும் மக்களால் உண்மையான ஹிரோ என பாராட்டப்படும் பாலாவை இதுவரை வெளியாகிய பிரோமோக்களில் எதிலும் காட்டவில்லை. இந்த நிலையிலேயே "பாலா இந்த சீசனில் இல்லையா? , அவர் இல்லையென்றால் நாங்கள் இந்த சீசனை பார்க்க மாட்டோம்? , அவர்தான் எங்களுடைய உண்மையான ஹீரோ? " என பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement