• May 18 2024

அதிர்ச்சி.. வாணி ஜெயராம் மரணத்தைத் தொடர்ந்து... காமெடி நடிகர் டி.பி கஜேந்திரனும் காலமானார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உடைய பிரபல இயக்குநரும், நடிகருமான இருந்து வந்தவர் டி.பி.கஜேந்திரன். அந்தவகையில் இவர் தமிழில் 'பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி பேரும் புகழும் பெற்றவர். அத்தோடு ஏராளமான தமிழ் படங்களில் காமெடி நடிகனாகவும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கின்றார்.


அந்தவகையில் டி.பி.கஜேந்திரன் 'பம்மல் கே.சம்பந்தம், சீனா தானா' உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இவர் புகழ்பெற்ற திரைப்பட நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் மகன் என்பது நமக்குத் தெரியும். 

அதுமட்டுமல்லாது குடும்பக் கதைகளை இயக்குவதில் கில்லாடி இயக்குநராக விளங்கிய விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தின் மூலம் தான் டிபி கஜேந்திரன் ஏராளமான குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களையே இயக்கி சாதனை படைத்தார்.


இந்நிலையில் 68வயதான இவர் இன்றைய தினம் உடல் நல குறைவால் மரணமடைந்துள்ளார். கஜேந்திரனின் இந்தத் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் கடந்த இரு தினங்களில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத், பாடகி வாணி ஜெயராம் ஆகியோர் மரணமடைந்த நிலையில், இன்று கஜேந்திரன் உயிரிழந்துள்ளது தமிழ்த் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் நடிகர் டி.பி.கஜேந்திரன், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடன் கல்லூரியில் ஒன்றாக இணைந்து படித்தவர் ஆவார். கல்லூரி காலத்தில் இருந்தே இவர்கள் இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர். நண்பனின் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 


அந்தவகையில் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்த டி.பி.கஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப் பெரும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement