• Oct 08 2024

கலைஞரின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர்.. ரஜினி பேச்சை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின்..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவ வேலு. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார். 


விழாவில் கலந்துகொண்ட  நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேசினார். முதல்வருக்கு பல வேலைகள் இருந்தாலும் கூட அவரே தலைமை தாங்கி விழா எடுத்தார்கள். வெளியே நல்லவங்களாக இருக்கிறவர்கள் வீட்டிற்குள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வெளியே ஒருவருக்கு இருக்கும் மரியாதை வீட்டில் இருக்கும் என்று சொல்ல முடியாது. 


இந்த விழாவில் என்ன பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்று லிஸ்ட் போட்டு தான் வந்தேன் எவ வேலு முதலிலேயே என்னிடம் சொன்னார். இது அரசியல் மேடை கிடையாதுங்க. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது என கூறி அழைத்தார். கருணாநிதி என்று வந்தால் சினிமா, இலக்கியம், அரசியல் ஆகிய 3 தான் முக்கியம். இதில் சினிமா பற்றி நிறைய பேசி இருக்கிறேன். அவரது இலக்கியங்களை அதிகம் படித்தது இல்லை. அப்புறம் இருப்பது அரசியல் தான். அரசியலில் ரொம்ப ஜாக்கிரதையாக பேசவேண்டும்.


எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை அசாத்தியமானவங்க இவங்க ஃபெயிலாவங்க இல்ல எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டி ஆட்டியவர். முக ஸ்டாலின் Hats off too you..''என பேசி சிரித்தார். இதையடுத்து மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் ரஜினியை பார்த்து சிரித்தப்படி கையெடுத்து கும்பிட்டார். இந்த வேளையில் மேடையில் இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் நிகழ்ச்சி அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. 

Advertisement