தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபலத்தின் 16 வயது மகள் விஜய் மகளாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் 'கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% நிறைவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டமாக வெளிநாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயது மகள் அபியுக்தா என்பவர் இந்த படத்தில் விஜய்யின் 16 வயது மகளாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இந்த படத்தில் பரதநாட்டிய நடன கலைஞராக வருகிறார் என்றும் இளம் வயதிலேயே மிகப்பெரிய புத்திசாலியாக இருக்கும் கேரக்டர் என்றும் அவர் விஜய்க்கு வரும் பிரச்சனைக்கு எப்படி உதவுவார் என்பது தான் அவருடைய கேரக்டரின் தன்மை என்றும் கூறப்படுகிறது. தளபதி விஜய்யுடன் அவர் ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் அவரது காட்சியின் படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!