• May 17 2024

பிக்பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராகக் களமிறங்கும் நடிகர் சுல் சுரேஷ்- இந்த சீசன் சூப்பரா களைகட்டும் போல இருக்கே!

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6இல்  நடிகர் கூல் சுரேஷ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தெரிவாகினார்.

இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பமாகும் என ப்ரோமோ எல்லாம் வெளியாகியிருந்தது. இதனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் பல படங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்து சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளார் கூல் சுரேஷ். இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இணைந்தால் கண்டிப்பாக நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் 100 நாட்கள் ஒரே இடத்தில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் நடவடிக்கைகள், உணர்வுகள் எப்படி மோதுகின்றன என்பது குறித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement