• Apr 27 2024

வாஷிங் மெஷினுக்குள் படுத்த பிக் பாஸ் போட்டியாளர்: தீயாய் பரவும் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் வாஷிங் மெஷினுக்குள் படுத்த வீடியோ  இணையத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும் அதை யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனில் கலந்து கொண்டிருப்பவர் பாடகரான அப்து ரோசிக். வளர்ச்சி இல்லாத ரோசிக்கால் பிக் பாஸ் வீடு களைகட்டுகிறது.

பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராக இருக்கிறார் அப்து ரோசிக். சுந்தர் சி. பாஷையில் சொல்ல வேண்டுமானால் ரோசிக்கை பார்க்கும்போது சுச்சுக்கி பிச்சுக்கினு கொஞ்ச வேண்டும் போன்று இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அப்து ரோசிக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பலரும் ஃபாலோ செய்கிறார்கள். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ தான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தான் வாஷிங் மெஷினிக்குள் இருக்கும் வீடியோவை வெளியிட்டு, என்னால் எங்கும் தூங்க முடியும். எனினும் இதை வீட்டில் முயற்சி செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் 16 வீட்டில் தங்க வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருக்கிறார் அப்து ரோசிக். அத்தோடு அவர் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement