• Oct 31 2024

பிக்பாஸ் வீட்டில் 10வது வாரம் டபுள் எவிக்‌ஷனா?- வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?- மிஸ்ஸான புல்லி கேங்

stella / 11 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என தகவல்கள் கசிந்துள்ளன. அர்ச்சனா, விசித்ரா, மணி, பூர்ணிமா, மாயா, அக்‌ஷயா, பிராவோ, ரவீனா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர்.

 இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரி உள்ளே வரும் நிலையில், டபுள் எவிக்‌ஷனை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பூகம்பம் டாஸ்க்கை தவிர இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லிக் கொள்ளும் படி எதுவுமே நடக்கவில்லை.


இந்த வார எவிக்‌ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் வோட்டிங்கில் பூர்ணிமாவுக்கு மேலே இருந்த அக்‌ஷயா மற்றும் ப்ராவோ வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரம் பூர்ணிமா கமல் குறித்து நிறைய பேசி இருக்கிறார். செருப்பை செட்டை விட்டு தூக்கி வீசினார். நிறைய முறை மைக் போடவில்லை. இதையாவது கமல் கண்டிப்பாரா இல்லை எப்போதும் போல தட்டி விட்டு வெட்டி நியாயம் பேசி செல்வாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement