• May 08 2024

பார்ரா!!... இவரும் 'லியோ' படத்துல இருக்காரா? லோகேஷ்ஷுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக் பாஸ் 3 பிரபலம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் சென்று இருக்கின்றனர். இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், பிரியா ஆனந்த் என்று பலர் நடிக்கின்றனர். 

 இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அபிராமியும் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மேலும், அபிராமி காஷ்மீரில் லோகேஷ் கனகராஜுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். விஜயின் பிகில் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement