• May 18 2024

கையில் துடைப்பக்கட்டையுடன் ஜி.பி.முத்து செய்த அட்ராசிட்டி-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு மட்டுமில்லாமல் உற்சாகத்திற்கும் குறைவில்லாமல்தான் உள்ளது. அத்தோடு கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், முதல் நாளிலேயே எங்க ஏரியா உள்ள வராதே என்று குத்தாட்டத்துடன்தான் நிகழ்ச்சியை போட்டியாளர்கள் துவங்கினர்.

இதனைத் தொடர்ந்து 4 குழுக்களாக பிரிந்து செயல்பட்டாலும் ஜிபி முத்துவை கலாய்ப்பது, அவரிடம் கதை கேட்பது, மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பேசுவது என ஹவுஸ்மேட்ஸ் மிகச்சிறப்பாகத்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து வருகின்றனர். எனினும் இதனிடையே அடுத்தடுத்த கட்டங்களில் சண்டைகள் மூண்டாதும் தொடர்ந்து அடுத்தடுத்த டாஸ்க்குகளில் தங்களது ஒற்றுமையை நிரூபித்தனர்.

அத்தோடு முதல் வாரத்தில் ஜிபி முத்துவுடன் சண்டையிட்ட தனலட்சுமி கூட இந்த வாரத்தில் அவரிடம் சகஜமாக இருந்ததை பார்க்க முடிந்தது.எனினும்  இதனிடையே இன்றைய தினமும் அடுத்தடுத்த சண்டைகள் அரங்கேறி வருகின்றன. ஆயிஷாவை வாடி, போடி என பேசியதாக அவர் அசீமிடம் செருப்பால் அடிப்பது போல் சென்றார்.

இதேபோல தன்னிடம் மோசமாக நடந்துக் கொண்டதாகவும் பாடி ஷேம் செய்ததாகவும் தனலட்சுமி அசலிடம் சண்டையிட்ட நிகழ்வும் இடம்பெற்றது. எனினும் இதையடுத்து தான் போட்டியில் இருந்து விலக விரும்புவதாக அவர் பிக்பாசிடம் வீடியோமூலம் குறிப்பிட்டு இருந்தார். ஒருபுறம் ஜிபி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் அவரும் வீடு திரும்ப விரும்புவதாகவும் கூறினார்.

ஆனாலும் போட்டியாளர்கள் தொடர்ந்து சக ஹவுஸ்மேட்களிடம் மிகவும் இயல்பாக, உற்சாகமாக ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு இருந்ததையும் கோபமாக பேசியவர்களை சமாதானப்படுத்தியதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. இவ்வாறுஇருக்கையில் இன்றைய தினமும் சுத்தம் என்பது நமக்கு பாடலுக்கு அனைவரும் இணைந்து ஆட்டம் போட்டனர்.



ஜிபி முத்து மட்டும் கையில் துடைப்பத்தை வைத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்தார். அவரையும் ஆட்டத்தில் ஈடுபடுத்த சில போட்டியாளர்கள் முயன்றனர். ஆனாலும் அவர் சுத்தம் செய்யாமல் ஆட்டம் போடும் போட்டியாளர்களை நோக்கி என்னப்பா இது என்ற ரீதியில்தான் கேள்வி எழுப்பினார்.அத்தோடு அவரும் துடைப்பத்தை வைத்து டான்ஸ் ஆடினார்.




Advertisement

Advertisement