• May 12 2024

ஷாருக்கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் அட்லி- ஜவான் படத்தின் மாஸான மேக்கிங் வீடியோ

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் அட்லி. இவர் விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இவர் தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம்  வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், அண்மையில் அனிருத் இசையில் ஜவான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.இந்நிலையில், வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோவை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் முழுவதும் சென்னையில் தான் படமாக்கப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்துள்ளார். 

ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இயக்குநர் அட்லியும் நடனமாடியுள்ளார். இப்பாடலில் ஷாருக்கான் தமிழில் பாடி நடனமாடியதையும் இணைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement