• Jan 18 2025

அட்லீஸ்ட் 100 தடவையா? ஹனிமூன் போன இடத்தில் வருவிடம் சிக்கித் தவிக்கும் அண்டர் டேக்கர்.!!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் வரலட்சுமி சரத்குமார். அதன் பின்பு தார தப்பட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இதைத்தொடர்ந்து விக்ரம் வேதா, சர்கார், மாரி 2, சண்டைக்கோழி 2, ராயன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய சினிமாவிலேயே பிரபலமான நடிகையாக காணப்படுகின்றார் வரலட்சுமி. இவர் தனக்கேற்ற வகையில் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவர் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சத்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

d_i_a

நிக்கோலாய் சத்தேவ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளதோடு அவருக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் வரலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தார் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி வைத்தனர்.


வரலட்சுமிக்கு ஜூலை மாதம் திருமணம் ஆனதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று வருகின்றார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வரலட்சுமி தவறாமல் தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், மாஹே தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள வரலட்சுமி அங்கே மனைவி ஒரு நல்ல போட்டோ போட கணவன் நூறு முறை போட்டோக்களை எடுக்க வேண்டும் என ஜாலியாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

நிக்கோலாய் பார்ப்பதற்கு அண்டர் டேக்கர் மாதிரி இருந்தாலும் மனைவின்னு வந்துட்டா கணவர்கள் அடிமை போல தான் இருக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். 

Advertisement

Advertisement