• May 13 2024

தீமை தான் வெல்லும் பாடலுக்கு... விக்ரமனைப் பார்த்து அசீம் கொடுத்த ரியாக்சன்... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அத்தோடு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது.


அந்தவகையில் இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய wake up song ஒலிக்கும் போது அசீம் செய்த ஒரு விசயமானது ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. அதாவது அதில் "தீமை தான் வெல்லும், என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும்" என்ற பாடல் ஒலிக்கின்றது. அந்த வரி இடம்பெறும் போது அசீம் விக்ரமனைக் கை காட்டி ரியாக்சன் கொடுக்கின்றார். 


இதனைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் விக்ரமன் தீய வழியில் ஜெயிக்க நினைப்பதாக அசீம் சொல்லாமல் சொல்வதாக கூறிக் கலாய்த்து வருகின்றார்கள்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement