• Dec 01 2022

அசீமுக்கு பொண்ணுங்க கிட்ட பேசவே தெரியாது ரொம்ப மட்டமான காரெக்டர்- உண்மையை உடைத்த பிரபலம்!

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!


பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு 23 நாட்களைகட கடந்துள்ள நிலையில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. வித்தியாசமான கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்படுவதால் போட்டியாளர்கள் சண்டை போட்டு விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்த கொண்டிருப்பவர் தான் அசீம். இவர் வீட்டிற்குள் சென்ற நாளிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவரது நடவடிக்கை மற்றும் தவறான வார்த்தைகளை பேசுதல் போன்ற காரணங்களால் கமல் சேரே கண்டித்தார்.


ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் அசீமை சுற்றி வருகின்றன. பிக் பாஸ் வீட்டிலும் சரி வெளியிலும் சரி அசீம் நிறைய ஹேட்டர்ஸ்களை சம்பாத்தி விட்டார்.அதே சமயம் அவருக்கு ஆதரவாக சில ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஏற்கெனவே திருமணம் ஆகி அது விவாகரத்தில் முடிந்து தனது மகனுக்காக தான் பிக் பாஸ் வந்ததாக அசீம் கூறி இருந்தார். அதனால் அசீம் செய்த தவறை சுட்டிக்காட்ட நினைத்த கமல், அவரின் மகன் பற்றியும் பேசி இருந்தார். அந்த வார எபிசோடுக்கு பின்பு அசீம் நடவடிக்கையில் சில மாற்றங்களையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் அசீமுடன் சன் டிவி  சீரியலில் சேர்ந்து நடித்த நடிகை தேவிப்பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் அசீம் பற்றி  நிறைய விஷயங்களை பேசி உள்ளார். சன் டிவியில் ஒளிப்பரப்பான பூவே உனக்காக சீரியலில் தேவிப்பிரியா வில்லி ரோலில் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் கதிர் ரோலில் நடிகர் அருண் நடித்து வந்தார்.அவர் சீரியலில் இருந்து விலகிய பின்பு அசீம் அந்த ரோலில் நடிக்க தொடங்கினார்.


அப்போது அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவரிடம்  அசீம் சண்டை போட்டதாக தேவிப்பிரியா குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகை யார்? என்பதை அவர் குறிப்பிட விரும்பவில்லை.” அவருக்கு தமிழ் தெரியாது. அந்த நடிகை ஐதராபாத்தை சேர்ந்தவர். அவரிடம் அசீம் மிகவும் மோசமாக சண்டை போட்டார். செட்டில் இருந்த எல்லோரும் அந்த பெண்ணை தான் சமாதானம் செய்தார்கள். ஐதராபாத்தில் இருந்து வந்தால் நீ பெரிய நடிகையா? என்றெல்லாம்  அசீம் மரியாதை இல்லாமல் பேசினார். அப்போது அனைவரும் பிரச்சனை வேண்டாம் என அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போது அவர் அதே மாதிரி தனலட்சுமியை பேசியதற்கு ஆண்டவர் நல்ல அறிவுரை கொடுத்தார்” என்று தேவிப்பிரியா தெரிவித்துள்ளார்.