• Apr 25 2024

ஜி.பி முத்து பிக்பாஸை விட்டு அவசரமா வர இந்த நடிகை தான் காரணமா?- பங்கமாய் கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டிக்டாக் என்னும் செயலி மூலம் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபலம் தான் ஜி.பி முத்து. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் தனக்கென யூடியூப் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

குறிப்பாக இதில் இவர் லெட்டர் படிக்கும் முறை ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இதனை அடுத்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரண்டே வாரத்தில் தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே விட்டார்.கடைசி வரை மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து இரண்டே வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சன்னிலியோன் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட் என்னும் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படத்தில் ஜி.பி முத்துவும் நடித்துள்ளதால் அவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் விழா மேடையில் ஜி.பி. முத்து சன்னி லியோனுக்கு பால் கோவா ஊட்டி விட்டார். பதிலுக்கு சன்னி லியோனும் அவருக்கு பால் கோவா ஊட்டினார். அதே போல நடிகை தர்ஷா குப்தாவுக்கு ஜி.பி. முத்து லட்டு ஊட்டினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும், 'தலைவரே இதுக்கு தான் அவசர அவசரமா பிக்பாஸ் விட்டு வந்தீங்களா' என ஜிபி முத்துவை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். 'ஓ மை கோஸ்ட்' படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்தப்படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


















Advertisement

Advertisement

Advertisement