• Jan 18 2025

நாமினேஷனில் சிக்கிய அருண்.. PR டீமின் கேவலமான செயல்.? வைரலாகும் காதல் லீலையின் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களை கடக்க உள்ளது. ஆனாலும் இந்த சீசன் மிகவும் டல்லாகவே செல்கின்றது. இதனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெரிதாக ஈடு கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஏழாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பானது. அதில் பங்கு பற்றிய பிரதீப் ஆண்டனிக்கு ஆரம்பத்தில் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அதன் பின்பு பிக் பாஸ் வீட்டில் உள்ள சக பெண் போட்டியாளர்கள் விஜய் ஆண்டனி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.

d_i_a

இதனால் எந்தவித விசாரணையும் இன்றி உலகநாயகன் கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் பிரதீப் ஆண்டனி. எனினும் அதற்குப் பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிரதீப் மீது எந்த தப்பும் இல்லை என்று நிரூபித்து இருந்தார்கள்.


பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றவர் தான் அர்ச்சனா. ஆரம்பத்தில் இவர் அழுது புலம்பினாலும் அதற்கு பின்பு இவரது ஆட்டம் வேற மாதிரி இருந்தது. இதனால் அந்த சீசன் மேலும் சூடு பிடித்தது. நாளடைவில் பிரதீப் ஆண்டனிக்கு இருந்த ரசிகர்கள் அத்தனை பேரும்அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்து அவரை வெற்றி பெற வைத்தார்கள்.


இவ்வாறான நிலையில் தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசனில் அர்ச்சனாவின் காதலரான அருண் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இதுவரை ரகசியமாக காதலித்த இவர்களது காதல்  தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தள பக்கங்களில் அர்ச்சனாவும் அருணும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்று சில நாட்களாகவே படு வைரலாகி  வருகின்றது. 

இதை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா தனக்கு இருக்கும் ரசிகர்களுக்கும் அருணுக்கு சப்போர்ட் பண்ணுமாறு சொல்லாமல் சொல்லுகின்றாரா? அல்லது இது பிஆர் டீமின் கேவலமான வேலையா என குறித்த வீடியோவை வைத்து ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement