கங்குவா திரைப்படம் வெளியாகி இன்றையோடு நான்கு நாட்களை கடந்துள்ளது. இதன் மூன்றாவது நாள் வசூல் 127 கோடி ரூபாய் என அதிகார்வ பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நான்காவது நாளில் சரிவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா படம் வரலாற்று அம்சம் நிறைந்த கதை என்பதாலும், இதில் சூர்யா மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், பாலிவுட் நடிகரான பாபி தியோல் இதில் வில்லனாக களம் இறங்கி இருந்ததாலும் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
கங்குவா திரைப்படம் வெளியாகி முதல் நாள் முதல் காட்சியின் பின்பு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவியத் தொடங்கின. இந்த படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாகவும், எதற்கு கத்துகின்றார்கள் என்றே தெரியாமல் கத்திக் கொண்டே இருக்கின்றார்கள், ஒழுங்காக படத்தை பார்க்க முடியவில்லை, சூர்யாவை சிறுத்தை சிவா பழிவாங்கி விட்டார் என்றெல்லாம் கருத்துக்கள் வேகமாக பரவத் தொடங்கின.
d_i_a"
இதை தொடர்ந்து சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா படத்தில் உள்ள பாசிட்டிவ் விமர்சனங்களை கதைப்பதற்கு யாரும் இல்லை. அதில் பெண்களின் சண்டைக் காட்சிகள், 3டி தொழில்நுட்பம் என்று பல அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளன. எனினும் எதற்காக கங்குவா படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றார்கள். குறை சொல்பவர்கள் யாரும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தப் போவதில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் பற்றியும் சூர்யா பற்றியும் சாட்டை துரைமுருகன் பேட்டி வழங்கியுள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், திட்டமிட்டு இந்த படத்தை தோல்வி படமாக மாற்ற வேண்டுமென்று கங்கணம் கட்டுகிறார்கள். இந்த படம் சூர்யாவுக்கு வெற்றி படமாக மாறக்கூடாது. அவரது கேரியரில் இது சிறப்பாக இருந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு இந்த படத்தை தோல்விப் படமாக மாற்ற முயலுகின்றார்கள்.
சூர்யா நன்றாக நடிக்கக் கூடியவர். தேசிய விருதுகளும் வாங்கியுள்ளார். சூர்யா நினைத்து இருந்தால் கேங்ஸ்டர் படத்திலோ காமெடி படத்திலோ நடித்து கோடிகளை சம்பாதித்து விட்டு போயிருக்கலாம்.
ஆனால் சமூக கருத்தை பிரதிபலிக்கும் நோக்கோடு வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் ஒரு கலைஞராக சூர்யா காணப்படுகின்றார்.
தெலுங்கு படங்களை கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அதிக உழைப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா படத்தை வீழ்த்துவதற்கு தமிழர்களே துணைபோவதுதான் மிகப் பெரிய கேவலம் என தெரிவித்துள்ளார்.
Listen News!