• Jan 19 2025

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரியப் போகின்றார்களா?- உண்மை உடைத்த பிரபலம்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதேபோல மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.

சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 1000ம் கோடி வசூல் சாதனை செய்தது. இவரது நடிப்பில் இறுதியாக அன்னபூரணி திரைப்படம் வெளியாகியிருந்தது.இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் ஜெய்யும் நடித்திருந்தார்.


இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்திருக்கும் இவர் கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்திருந்தார்.இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வருங்காலத்தில் பிரிய வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் வேணுசாமி தெரிவித்துள்ளார். 


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிவரும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணுசாமி கணித்த நிலையில், அதேபோல இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரிய வாய்ப்புள்ளதாக வேணுசாமி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement