• Jan 18 2025

Archana உண்மையாவே Bigg Boss Product தான்!- ரகசியத்தை உடைத்த அர்ச்சனாவின் மாமனார்- அடடே இந்த நடிகரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ரிடியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. வந்த முதல் நாளில் ரசிகர்களின் எரிச்சலை சம்பாதித்த அர்ச்சனா அடுத்த வாரத்தில் இருந்தே எரிமலை வெடித்ததை போல் பொங்கி எழுந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.

நாளுக்கு நாள் ரசிகர்களின் அன்பை பெற்ற அர்ச்சனா வோட்டிங்கிலும் முதலிடத்தையே பெற்று வந்தார். அதன் காரணமாகவே எலிமினேட் லிஸ்ட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் அர்ச்சனா காப்பாற்றப்பட்டு வருகின்றார்.


மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் விளையாடும் விதம் ரசிகர்களுக்கு பிடித்ததால் டைட்டில் வின்னராக இவர் ஆவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அர்ச்சனாவுடன் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் மாமாவாக நடித்த நடிகர் தற்பொழுது பேட்டியளித்துள்ளார்.அதில் அர்ச்சனா குறித்த சில சுவாரஸியமான சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது, அர்ச்சனா ஷுட்டிங் நடக்காத டைம்ல யாருக்கும் பிரச்சினை என்றால் கூட போய் தைரியமாகக் கேட்பா,நாங்க அப்பவே Bigg Boss Product தான் அர்ச்சனா என்று சொல்லுவோம்.


என்னை டாடி டாடி என்று தான் சொல்லுவா,அவ வெளில இருக்கிற மாதிரி தான் பிக்பாஸ்லையும் இருக்கிறா என அவர் ஓபனாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement