• May 19 2024

அண்ணாச்சியின் தி லெஜெண்ட் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

tech / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தி லெஜெண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.காமெடி,ஆக்ஷன் ரொமான்ஸ் சென்டிமென்ட் போன்ற அனைத்து காட்சிகளிலும் பின்னி பெடல் எடுக்கிறார். ட்ரெய்லரில் வரும் பல காட்சிகள் மற்றும் அண்ணாச்சியின் உடை போன்றவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை நினைவுகூருகின்றது.

மேலும் விஜய்,அஜித் போன்ற நடிகர்களே பான் இந்தியா திரைப்படத்தை எடுக்க யோசித்து வரும் நிலையில் அண்ணாச்சி தனிஉடைய முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாரும் ஃபைனாஞ்சியருமான அன்புச்செழியன் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளார். இந்நிலையில் படம் ஜூலை 28ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement