• Apr 27 2024

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக வந்தவரின் அடுத்த படம் குறித்து வெளியாகிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும்  திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்' இப்படத்தில்  'பூங்குழலி' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான்  ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர் ஆக்ஷன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

தொடர்ந்து 'ஜகமே தந்திரம்', 'கேப்டன்', 'கார்கி' போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றார்.இருப்பினும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவருடைய தோற்றம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது.நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


தற்போது இவர் ட்ரிப்பிள்ஸ் வெப் தொடரின் இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அம்மு. ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

'அம்மு' திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement