• Dec 26 2024

தென்னிந்திய நடிகர்களை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்.. அடித்து நொறுக்கிய மொத்த கலெக்ஷன்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

புஷ்பா படத்தின் முதலாவது பாகம் செம்மர கடத்தலை மையமாகக் கொண்டே கதை நகர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு நேற்றைய தினம் உலக அளவில் வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது.

புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு சாமானிய மனிதன் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் அளவிற்கு வளர்ச்சி அடைகின்றான்? அவனின் பின்னணி என்ன? எதிரிகளால் வருகின்ற பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கின்றான்? என எமோஷனல் ஆக்சன் காட்சிகள் கலந்த படமாக வெளியாகியிருந்தது.

d_i_a

புஷ்பா முதலாவது பாகத்தில் ரஷ்மிகா நாயகியாக நடித்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியானதோடு வசூலிலும் 1500 கோடியை சொல்லி அடிக்கும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல் விபரம் பற்றிய தகவல் அதிகாரியபூர்வமாகவே வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா 2 திரைப்படம் முதலாவது நாளில் 294 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. இந்த படம் எதிர்வரும் விடுமுறை நாட்களை டார்கெட் செய்து  ஆயிரம் கோடியை தாண்டும் என கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement