விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களுள் பிரபலமான சீரியல் தான் முத்தழகு சீரியல். கிராமத்து கதை அம்சத்தில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்பட்டது. ஆனாலும் சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
முத்தழகு சீரியலில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை ஷோபனா. இவர் இந்த சீரியலுக்கு பிறகு தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அண்மையில் இவர் தான் காரில் செல்லும்போது கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்கள், தன்னை வழிமறித்து பேசியதாக சந்தோஷமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த சீரியலில் இவருடைய அப்பாவித்தனமான நடிப்பும் குழந்தைத்தனமான மனமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. ஆனாலும் இந்த சீரியல் இரண்டு வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
எனினும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷோபனா அடிக்கடி ரில்ஸ், போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். முத்தழகு சீரியலுக்குப் பிறகு அவர் வேறு எந்த சீரியலும் நடிப்பதற்கு கமிட் ஆகவில்லை.
இந்த நிலையில், நடிகை ஷோபனா புஷ்பா 2 படத்தில் பிரபலமாக காணப்படும் கிஸ் சாங்கிற்கு நடனம் ஆடியதோடு, ரசிகர்களை சூடாக்கும் வகையில் ஆடை அணிந்து குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது இவருடைய வீடியோ வைரலாகி வருவதோடு லைக்குகளும் குவிந்து வருகின்றது.
Listen News!