நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.
இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதனால் இவர் எவர்கிரீன் சூப்பர் ஹிட் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆர்யா 2, S/O சத்தியமூர்த்தி மற்றும் ருத்ரமாதேவி, சர்ரைனோடு ஆர்யா 2, சங்கர் தாதா ஜிந்தாபாத், வருடு, வேதம், ரேஸ் குர்ராம்,, DJ: துவ்வாடா ஜகன்னாதம் மற்றும் அல வைகுந்தபுரமுலு போன்ற பல படங்கள் வெற்றி படங்களாக உள்ளன. அல வைகுந்தபுரமுலு இடம் பெற்ற புட்டபொம்மா புட்டபொம்மா பாடல் அனைவரையும் ஆட்டம்போடவைத்தது.
அத்தோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலீசான புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன அந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு, பேச்சு, பாடி லாங்வேஜ் என அனைத்தும் மாஸாக இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
பாக்ஸ் ஆபிசில் உலகம் முழுவதும் ₹300 கோடி வசூலை வாரிக்கவித்தது.அத்தோடு இன்று புஸ்பா 2 திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில், நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கிராண்ட் மார்ஷலாக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த அல்லு அர்ஜுனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற பேரணியில் அல்லு அர்ஜூன் தேசிய கொடியை கையில் ஏந்திய படி திறந்த ஜூப்பில் வலம் வந்தார்.
மேலும் இந்த அணிவகுப்பில் அல்லுவுடன் அவரது மனைவி சினேகா ரெட்டி கலந்து கொண்டார். இந்த விழாவில், அல்லு அர்ஜூன் கிராண்ட் மார்ஷல் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார். இந்த வீடியோவை நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் கிராண்ட் மார்ஷல் ஆனது ஒரு மரியாதை" என தெரிவித்துள்ளார்.
It was a pleasure meeting the Mayor of New York City . Very Sportive Gentleman. Thank You for the Honours Mr. Eric Adams . Thaggede Le ! @ericadamsfornyc @NYCMayorsOffice pic.twitter.com/LdMsGy4IE0
Listen News!