• Jan 19 2025

அஜித்தை வைத்து 2 படம் தயாரித்த தயாரிப்பாளர் கைது.. கண்டு கொள்ளாத அஜித்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த இரண்டு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் நடித்தவான்மதிமற்றும்காதல் கோட்டைஆகிய படங்களை தயாரித்தவரும் சூர்யா நடித்தகாதலை நிம்மதிஉள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். இவர் அல்லு அர்ஜுன் நடித்த ஒரு படத்தை தயாரித்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு கோடி 70 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதற்காக அவர் கொடுத்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் சிவசக்தி பாண்டியன் கொடுக்கவில்லை என்றும் இதனை அடுத்து நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிகிறது.

நீதிமன்றம் சிவசக்தி பாண்டியனுக்கு பல தவணைகள் வழங்கியும் பணத்தை தர அவர் முன் வராததை அடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் சிவசக்தி பாண்டியனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, அதன் பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் இரண்டு படங்கள், சூர்யாவின் ஒரு படம், முரளி உட்பட ஒரு சில நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அஜித் மற்றும் சூர்யா ஆகிய இருவருமே இது குறித்து எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என்றும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement