• May 18 2024

துணிவு கதையை கேட்காமல் படத்தில் நடித்த அஜித்.. உண்மையை உடைத்த இயக்குநர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படம் வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகின்றது.இப்படத்தை  எச். வினோத் இயக்கியுள்ளார். 

அத்தோடு அஜித் - எச். வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம்  தான் துணிவு.

இப்படத்தின் முதல் பாடல் ' சில்லா சில்லா ' வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது அந்த அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் எச். வினோத் பல பத்திரிகைகளில் பேட்டி அளித்து வருகிறார்.

மேலும் அப்படி எச். வினோத் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ' அஜித் சார் துணிவு படத்தின் கதையை கேட்கவில்லை. படத்தில் இடம்பெறும் ஒரு சீன் மட்டும் தான் கேட்டார். அது அவருக்கு ரொம்ப புடிச்சுருச்சு. அதனால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால், அஜித் சாருக்கு மிகவும் பிடிச்ச அந்த சீனை படத்தில் வைக்க முடியாமல் போய்விட்டது ' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement