• May 19 2024

பல வருடங்களுக்குப் பிறகு முக்கிய பிரபலத்தைச் சந்தித்த சூர்யா- அவரே வெளியிட்ட நெகிழ்ச்சிப் போட்டோ

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர். நடிகர் சூர்யா. அதுமாத்திரமின்றி தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை தீஷா பதானி நடிக்கிறார்.


இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் ஸ்டுடியோ க்ரீன் சார்பாக தயாராகி வருகிறது.இதனை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.


இந்த நிலையில் தற்போது சூர்யா அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியரை தற்போது பல வருடங்கள் கழித்து சந்தித்து இருக்கிறார்.1995 வருட பேட்ச் Commerce Department HOD ஆக இருந்த ராபர்ட் என்பவரை தான் சூர்யா சந்தித்து இருக்கிறார். 


அப்போது எடுத்த புகைப்படங்களை சூர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement