• May 11 2024

சொந்தமாக தோட்டம் ஒன்றை வாங்கிய ஜி.பி முத்து- நீச்சல் குளம் எல்லாம் கட்டப்போகின்றாரா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டிக்டாக் என்னும் செயலி மூலம் பிரபல்யமானவர் தான் ஜி.பி முத்து. இதனை அடுத்து யூடியூப் சேனலில் வீடியோ போட்டும் தனக்கென் தனி ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துக் கொண்டார். இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.

அதன்படி  இந்தாண்டு அஜித்தின் துணிவு, பா பா பிளாக் ஷீப் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஜி பி முத்து சமீபத்தில் KIA காரை வாங்கிய வீடியோவை வெளியிட்டு இருந்தார்.


 இந்நிலையில், புதிதாக தோட்டம் அமைக்க இடம் ஒன்றை வாங்கி இருப்பதாக தனது லேட்டஸ்ட் வீடியோவில் அந்த இடத்தில் இருந்தபடியே எடுத்த காட்சிகளை வெளியிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.சொந்தமாக 40 சென்ட் நிலத்தை வாங்கி, அதிலிருந்த கருவேல மரங்களை ஜேசிபி கொண்டு அகற்றும் காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளார்.


புதிதாக வாங்கிய 40 சென்ட் நிலத்தில் தோட்டம் அமைக்கப் போவதாகவும், நீச்சல் குளம் கட்டி தனது குடும்பத்துடன் விளையாட போவதாகவும் அந்த வீடியோவில் ஜி பி முத்து கூறியுள்ளார். கருவேல மரங்கள் நம் மண்ணை மலடாக்கி வருகிறது. முடிந்தவரை அதனை அகற்ற வேண்டும் சமூக கருத்தையும் கூறியுள்ளார்.ஜி பி முத்துவின் இந்த வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அவர் மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement