• May 18 2024

அஜித்தின் வெற்றி இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் அதிதி சங்கர்- அடுத்த படம் பற்றிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் விருமன். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அதிதி ஷங்கர்.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் என்பன ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக் குவிய ஆரம்பித்தது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார்.


மடோன் அஸ்வின்  இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் 

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் படம் இயக்காமல் இருந்து வந்த விஷ்ணுவர்தன், ஹிந்தியில் ஷேர்ஷா என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு விருதுகளை வென்று குவிந்தது. தற்போது அவர் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ள படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement