• May 18 2024

அடேங்கப்பா.. வெளியாகிய மாஸ் அப்டேட்- லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்- 171வது படம் தான் தலைவரின் இறுதிப்படமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாகும். இருவருக்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பியிருக்கின்றனர்.

 ரஜினியின் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. அதைப்போல நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே இருவரும் ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றனர்.


ஜெயிலர் திரைப்படத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என பல சூப்பர்ஸ்டார் நடிகர்களும் நடித்து வருவதோடு இப்படம் பான் இந்தியத் திரைப்படமாகவும் உருவாகி வருகின்றது.


இது தவிர தனது மூத்த மகள் இயக்கத்தில் லாம் சலாம் என்னும் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினிகாந்தின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாகவும் இப்படம் தான் ரஜினிகாந்தின் இறுதிப்படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement