• Sep 20 2024

திருமணத்திற்கு இன்னும் சில நாட்கள் தான்.. திடீரென தனுஷூக்கு ஜோடியான பிரபல நடிகை..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் தனுஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடித்த ‘ராயன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் அடுத்த கட்டமாக ’குபேரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் தனுஷ் இயக்கி முடித்துள்ள நிலையில் இன்னொரு படத்தையும் அவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு ஜோடியாக நடிகை சுனைனா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகை சுனைனாவின் காட்சிகள் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சுனைனாவுக்கும் துபாயை சேர்ந்த யூடியூபர் காலில் அல் அமரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்களில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் தற்போது தனுஷ் படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement