• Oct 18 2024

சமந்தாவின் அடுத்த வெப்தொடர்.. ஹீரோ யார் தெரியுமா? இணையும் மற்றொரு முக்கிய நடிகை..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!


நடிகை சமந்தா நடிக்க உள்ள அடுத்த வெப்தொடர் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இந்த வெப் தொடரில் நடிக்கும் ஹீரோ மற்றும் இன்னொரு பிரபல நடிகை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நோயிலிருந்து அவர் முழுவதும் குணமாகிவிட்ட நிலையில் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமந்தா நடித்த ‘தி பேமிலி மேன்’ என்ற தொடரை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் முன்னணி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ராஜ் & டிகே ஆகிய இருவரும் தயாரிக்கும் இந்த தொடரில் ஆதித்யா ராய் கபூர் ஹீரோவாகவும் சமந்தா ஹீரோயினியாகவும் நடிக்க உள்ளதாகவும் இந்த தொடரில் வாமிகா கபி முக்கிய வேடத்தில்  நடிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

நடிகை வாமிகா கபி ஏற்கனவே செல்வராகவன் மனைவி இயக்கத்தில் உருவான ’மாலை நேரத்தில் மயக்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் ’ஜெனி’ என்ற படத்திலும், ’தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ’பேபி ஜான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

’ரக்த் பிரம்மந்த்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் இந்த தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement